Monday, August 3, 2015

திராவிடத்தால் வீழ்ந்தோம்.... முன்னுரையில் இருந்து மேலும்..

இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஈ.வே இராமசாமிப் பெரியார் கட்டியமைத்த திராவிடர் கழகத்தின் தொடக்கக் கால உறுப்பினர் யாருமே இருக்க மாட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய தலை மக்கள் யாருமே இருக்கப் போவதில்லை அவற்றின் வழி வந்த பிற கழகங்களோ பெயருக்குதாம் அவற்றின் கொள்கை வழி நிற்பன.

செத்த உடம்பை ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு சாகக் கிடக்கின்ற அதன் திராவிடக் கொள்கையை இந்நிலையில் ஆழமாக அலச வேண்டி உள்ளது வளர்ந்துவரும் தமிழ்த் தேசிய ஓர்மைக்கு நல்ல ஊட்டமும் தெளிவும் கிடைக்கும் என்பதைக்  கருதியே இந்த ஆய்வை நடத்த வேண்டி உள்ளது அத திராவிடக் கொள்கை தமிழக அரசியல் வாழ்வியலின் மீது முக்கால் நூற்றாண்டுகளாக அழுந்தக் குந்திக் கிடந்ததனால் தமிழுக்கும் தமிழரினத்திற்கும் நன்மைகளை விடத் தீமைகளே மிகுந்தன வென்பதைத் தமிழரில் இளந்தலைமுறையினருக்கு  மிகத் தெளிவாக உணர்த்தியே ஆக வேண்டும். இதனால் எட்டிக் கசப்பான சில உண்மைகளையும் உள்ளடக்க நேர்ந்தது.

குறுநூலாக வடிவெடுத்துள்ள இந்தக் கட்டுரை நல்ல தூசியைக் கிளப்பும்  என்பதை நூலாசிரியன் என்னும் வகையில் நன்கறிவேன். தமிழரினத்தின் நலன் கருதி ஒரு வரலாற்றுப் பணியைச் செய்யாமலிருக்க இயலவில்லை. உண்மை விளங்கியும் அதைப் புலப்படுத்தாமை கயமையாகுமன்றோ ? அதை மனத்தில் கொண்டே சில கருத்துக்களைக் கட்டுரையாக்கித் தமிழ் மக்களின் முன்னால்  படைத்திடத் துணிந்தேன் போற்றல்களாயினும்  தூற்றல்களாயினும்   அவற்றையெல்லாம் கட்டிச்  சுமக்கத் தானே வேண்டும் ?

 அவையாவும் காலம் என்மேல் ஏற்றிட்ட பொதியே எனக் கருதி விளைவைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஏடெடுத்தென் எழுதுவதற்கு.

அறிவர் குணா.. நன்றியும் நெகிழ்வும்...  
  

Tuesday, July 28, 2015

திராவிடத்தால் வீழ்ந்தோம்

முன்னுரையிலிருந்து.............

ஆரியக் கோணத்திலிருந்து தமிழரின் வரலாற்றை பலர் எழுதியது உண்டு. திராவிடப் பார்வையைக் கொண்டு வரலாறு எழுதியவரும் உண்டு அவை யாவுமே தமிழரின் வரலாற்றை கொச்சைப் படுத்தவும், இருட்டடிப்புச் செய்யவுமே பார்த்தன வென்பது பட்டறிவு.

இதனால் அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குக் கடுமையாக உழைத்துத் தமிழரினப் பார்வையில் தமிழரின் வரலாற்றை எழுதுவதற்காகவென இனி யாதொரு கருத்தரங்கிலும் கலந்துகொள்வதில்லையென நான் முடிவெடுத்திருந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியிடமிருந்து 1994 சூன் 25-26 ஆம் பக்கல்களில் குடந்தையில் நடத்தவிருந்த "திராவிட மாயை" என்னும் தலைப்பில் கருத்துரையாற்ற ஓர் அழைப்பு வந்தது. கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு, என்னுடைய முந்தைய முடிவில் ஓர் இளக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கருத்தரங்கிற்காக நானெழுதிய நீண்ட கட்டுரையே இஃதாகும். கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களுக்கும் எனக்கும் இடையிலான செய்திப் போக்குவரத்தில் ஏற்பட்ட சுணக்கத்தால் அதில் பங்கெடுக்க முடியாமல் போயிடினும் அக்கருத்தரங்கிற்கான அழைப்பே இக்கட்டுரையை எழுதத் தூண்டுகோலாகியது

--அறிவர் குணா 

Wednesday, June 17, 2015

தமிழ்த் தேசியம்

தமிழ் தேசியத்திற்கான களம். தமிழரின் வாழ்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு சிக்கியிருக்கும் நிலையில் தமிழரின் முன்னேற்றத்திற்காகவும் மீட்சிக்காகவும் எழுச்சிக்காகவும் வலைத்தளத்தில் தீவிர முன்னெடுப்புகளை நடத்துவதே இத்தளத்தின் நோக்கமாகும். நன்றி