Tuesday, July 28, 2015

திராவிடத்தால் வீழ்ந்தோம்

முன்னுரையிலிருந்து.............

ஆரியக் கோணத்திலிருந்து தமிழரின் வரலாற்றை பலர் எழுதியது உண்டு. திராவிடப் பார்வையைக் கொண்டு வரலாறு எழுதியவரும் உண்டு அவை யாவுமே தமிழரின் வரலாற்றை கொச்சைப் படுத்தவும், இருட்டடிப்புச் செய்யவுமே பார்த்தன வென்பது பட்டறிவு.

இதனால் அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குக் கடுமையாக உழைத்துத் தமிழரினப் பார்வையில் தமிழரின் வரலாற்றை எழுதுவதற்காகவென இனி யாதொரு கருத்தரங்கிலும் கலந்துகொள்வதில்லையென நான் முடிவெடுத்திருந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியிடமிருந்து 1994 சூன் 25-26 ஆம் பக்கல்களில் குடந்தையில் நடத்தவிருந்த "திராவிட மாயை" என்னும் தலைப்பில் கருத்துரையாற்ற ஓர் அழைப்பு வந்தது. கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு, என்னுடைய முந்தைய முடிவில் ஓர் இளக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கருத்தரங்கிற்காக நானெழுதிய நீண்ட கட்டுரையே இஃதாகும். கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களுக்கும் எனக்கும் இடையிலான செய்திப் போக்குவரத்தில் ஏற்பட்ட சுணக்கத்தால் அதில் பங்கெடுக்க முடியாமல் போயிடினும் அக்கருத்தரங்கிற்கான அழைப்பே இக்கட்டுரையை எழுதத் தூண்டுகோலாகியது

--அறிவர் குணா