Tuesday, July 28, 2015

திராவிடத்தால் வீழ்ந்தோம்

முன்னுரையிலிருந்து.............

ஆரியக் கோணத்திலிருந்து தமிழரின் வரலாற்றை பலர் எழுதியது உண்டு. திராவிடப் பார்வையைக் கொண்டு வரலாறு எழுதியவரும் உண்டு அவை யாவுமே தமிழரின் வரலாற்றை கொச்சைப் படுத்தவும், இருட்டடிப்புச் செய்யவுமே பார்த்தன வென்பது பட்டறிவு.

இதனால் அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குக் கடுமையாக உழைத்துத் தமிழரினப் பார்வையில் தமிழரின் வரலாற்றை எழுதுவதற்காகவென இனி யாதொரு கருத்தரங்கிலும் கலந்துகொள்வதில்லையென நான் முடிவெடுத்திருந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியிடமிருந்து 1994 சூன் 25-26 ஆம் பக்கல்களில் குடந்தையில் நடத்தவிருந்த "திராவிட மாயை" என்னும் தலைப்பில் கருத்துரையாற்ற ஓர் அழைப்பு வந்தது. கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு, என்னுடைய முந்தைய முடிவில் ஓர் இளக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கருத்தரங்கிற்காக நானெழுதிய நீண்ட கட்டுரையே இஃதாகும். கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களுக்கும் எனக்கும் இடையிலான செய்திப் போக்குவரத்தில் ஏற்பட்ட சுணக்கத்தால் அதில் பங்கெடுக்க முடியாமல் போயிடினும் அக்கருத்தரங்கிற்கான அழைப்பே இக்கட்டுரையை எழுதத் தூண்டுகோலாகியது

--அறிவர் குணா 

4 comments:

  1. கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்திருந்தால் என்ன அதிர்வை உங்கள் ஆரியத்தால் வீழ்ந்தோம் என்ற கட்டுரை செய்து இருக்குமோ அதை விட தமிழகத்தில் பெரியாரிய இயக்கத்தினருடனும், திரவிட இயக்கத்தினருடனும் ஆழமாக பதிந்து பதில் சொல்ல தெரியாமல் விழி பிதுங்கி உள்ளார்...

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லுங்கள்

      Delete
    2. திராவிடம் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்படும் பொறுத்திருங்கள் இணைந்திருங்கள்

      Delete
  2. Titanium Dive Knife - The Game of Death - The Game of Death
    There are two different variants of a knife. One titanium jewelry is called a blade. You can still choose the blades you want, can titanium rings be resized or you can use the black titanium wedding bands blade titanium pots and pans in a $39.99 · ‎In ford edge titanium 2019 stock

    ReplyDelete